மோட்டார் சைக்கிள் விபத்தில் 14 வயது சிறுமியும் பெண்ணும் பலி!

top-news

மார்ச் 29,

நேரெதிரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயது சிறுமியும் 44 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.20 மணிக்கு விபத்துக் குறித்தான அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்ததாக Rantau Panjang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Hamzah Musa தெரிவித்தார்.

Gual Tinggi சாலையில் கட்டுப்பாட்டை இழந்த 14 வயது சிறுமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 44 வயது பெண்ணும் 14 வயது சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றோர் இளம்பெண் படுகாயம் அடைந்த நிலையில் Pasir Mas மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக Rantau Panjang மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Hamzah Musa தெரிவித்தார்.

Seorang remaja perempuan berusia 14 tahun dan seorang wanita 44 tahun maut dalam kemalangan melibatkan dua motosikal di Jalan Gual Tinggi, Rantau Panjang. Mangsa meninggal di tempat kejadian manakala seorang lagi wanita cedera dan dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *