விபத்தில் மாணவன் பலி! மற்றொரு மாணவர் படுகாயம்! வாகனமோட்டி கைது!
- Thinagaren Sanggaren
- 15 Feb, 2026
பிப்ரவரி 15,
குவாந்தானிலிருந்து மெர்சிங் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 16 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பப் பெற்றதும் மீட்புப் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரொம்பின் மாவட்டக் காவல் ஆணையர் Sharif Shai Sharif தெரிவித்தார். மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவருடன் பயணித்த மற்றொருவர் படுகாயம் அடைந்ததாகவும் Sharif Shai Sharif தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்திலிருந்த வாகனமோட்டியும் மற்றோர் ஆடவரும் எந்தவொரு காயமுமின்றி தப்பிய நிலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதற்காக 32 வயது வாகனமோட்டி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் Sharif Shai Sharif தெரிவித்தார். உயிரிழந்த் 16 வயது மாணவர் குவாந்தானைச் சேர்ந்த Danish Irfan என்றும் படுகாயம் அடைந்த அவரின் நண்பர் 15 வயது Isyraff Farish என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ரொம்பின் மாவட்டக் காவல் ஆணையர் Sharif Shai Sharif தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



