கோர விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 6,

UniSZA பல்கலைக்கழக மாணவியின் வாகனத்தை மற்றொரு வாகனம் மோதி கொடூரமான விபத்தை ஏற்படுத்தியதில் 25 வயது பல்கலைக்கழக மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோலா திரங்கானுவில் உள்ள  Jalan Bukit Kecil சாலையின் சமிஞ்சை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த Perodua Viva வாகனம் சாலையைக் கடக்கும் போது எதிரில் வந்த HONDA JAZZ வாகனம் மோதியது. விபத்து நிகழ்ந்த போது Perodua Viva வாகனத்தின் பின்னாள் போக்குவரத்துத் துறையின் அமலாக்க அதிகாரிகளின் ரோந்து வாகனமும் இருந்ததால், விபத்து நிகழ்ந்ததும் வாகனத்தில் சிக்கியிருந்த 32 வயது ஆடவரை உடனடியாக மீட்டனர்.

Perodua Viva வாகனத்திலிருந்த 25 வயது Syakirah எனும் UniSZA பல்கலைக்கழக மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். பிற்பகல் 1.39 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் 32 வயது வாகனமோட்டி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகக் காவல்துறை உறுதிபடுத்திய நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் 32 வயது வாகனமோட்டி கைது செய்யப்படுவார் என கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *