விபத்துக்குள்ளான 3 லாரிகள்! ஒருவர் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 22 Apr, 2025
ஏப்ரல் 22,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மற்ற 2 லாரிகளை மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக ஜொகூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Asmiza Zaini தெரிவித்தார். இன்று அதிகாலை 4.55 மணிக்கு இவ்விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதும் கூலாய் மீட்பு ஆணையத்திலிருந்து 12 அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
விபத்தில் 3 லாரிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் சிக்கியிருந்ததாகவும் விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதுள்ள மற்றொரு லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்துக்குள்ளான மற்றொரு லாரி ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் ஜொகூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Asmiza Zaini தெரிவித்தார். விபத்திற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiga lori terlibat dalam kemalangan di Lebuhraya Utara-Selatan menyebabkan seorang maut dan dua cedera. Kejadian berlaku awal pagi di Johor. Pihak berkuasa sedang menyiasat punca kemalangan yang melibatkan juga sebuah motosikal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *