பேருந்தை மோதிய வேன்! ஒருவர் பலி! 12 பேர் படுகாயம்!

top-news

மார்ச் 22,


நேற்று அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததுடன் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை 6.41 மணிக்கு சைபர்ஜெயாவில் உள்ள SMART நெடுஞ்சாலையின் நுழைவாயில் இவ்விபத்து நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் AHMAD MUKHLIS MUKHTAR தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர் 40 வயதுள்ள BANGLADESH நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 40 வயது உள்ளூர் ஆடவரான வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. தொழிலாளர் வேனில் இருந்த 12 தொழிலாளர்களுக் ஓட்டுநரும் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் AHMAD MUKHLIS MUKHTAR தெரிவித்தார்.

Sebuah van pekerja hilang kawalan dan melanggar bas di Cyberjaya, mengakibatkan seorang pekerja Bangladesh maut dan 12 cedera. Pemandu van tempatan turut cedera. Polis sedang menyiasat punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *