விபத்துக்குள்ளான வேன்! ஐவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 06 Apr, 2025
ஏப்ரல் 6,
கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் படுகாயம் அடைந்த நிலையில் ஐவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாக Bintulu மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் WAN KAMARUDIN AHMAD தெரிவித்தார். 5 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற வேன் பின்துலுவிலிருந்து SAMALAJU செல்லும் சாலையில் இரவு 10.26 மணிக்கு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேனிலிருந்த 5 சுற்றுலா பயணிக்கும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பிய நிலையில் வேன் ஓட்டுநர் வேனிலேயே சிக்கியதாகவும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் BINTULU மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் Bintulu மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் WAN KAMARUDIN AHMAD தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறை விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Sebuah van hilang kawalan dan terlibat dalam kemalangan di jalan Bintulu ke Samalaju. Pemandu van cedera parah di kepala manakala lima pelancong mengalami kecederaan ringan. Semua mangsa menerima rawatan di hospital dan tiada kematian dilaporkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *