நேரெதிரே மோதிய இரு கார்கள்! பெண் பலி! மற்றொருவர் படுகாயம்!
- Thinagaren Sanggaren
- 31 Jul, 2025
ஜூலை 31,
கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்கள் நேரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஓட்டுநர் உயிரிழந்ததுடன் வாகனத்திலிருந்து மற்றொருவர் படுகாயம் அடைந்தார். நேற்று காலை 8.37 மணிக்கு விபத்துக் குறித்தான தகவல் பொதுமக்களிடமிருந்து பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் பணி அதிகாரிகளுடன் விரைந்ததாகப் பினாங்கு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார். பினாங்கின் Jalan Taman Bertam Perdana சாலையில் காலை 8.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகப் பினாங்கு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis உறுதிப்படுத்தினார்.
இந்த விபத்தில் Proton Wira வாகனத்திலிருந்த 41 வயது Khirul Mazwan Mustafa எனும் பெண் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரின் தங்கை
என நம்பப்படும் 37 வயதான Khirul Asmaa Mustafa படுகாயம்
அடைந்திருப்பதாகவும் பினாங்கு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun
Francis தெரிவித்தார். விபத்துக்குள்ளான மற்றொரு Peugeot வாகனத்திலிருந்த 28 வயது ஆடவர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும்
விபத்துக்குறித்தான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் பினாங்கு
மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



