லாரியின் பின்னால் மோதி இளம் மோட்டார் சைக்கிளோட்டி பலி!
- Thinagaren Sanggaren
- 06 Oct, 2025
அக்தோபர் 6,
இன்று அதிகாலை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார். வடக்கு தெற்கு நெடுஞ்சலையின் YONG PENG அருகில் பழுதடைந்த லாரி நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியதாக நம்பப்படுகிறது. உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி 19 வயது உள்ளூர் இளைஞர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் BATU PAHAT மாவட்டக் காவல் ஆணையர் SHAHRUL ANUAR SANI தெரிவித்தார். சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் ஓட்டுநர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



