வெப்ப அலை எச்சரிக்கை – 7 பகுதிகள் கடும் பாதிப்பு
- Surendran Sumdraraj
- 27 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 27-
Jabatan Meteorologi Malaysia (MetMalaysia) வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, மலேசிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிகளில் கடும் வெப்பம் மற்றும் வறட்சி நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, கெடா மாநிலத்தில் உள்ள பாலிங், சிக், பெண்டாங், பொகோக் சேனா மற்றும் கோத்தா ஸ்டார் ஆகிய மாவட்டங்கள் வெப்ப அலை (Tahap 2) நிலையைப் பதிவு செய்துள்ளன. இதனுடன் முழு பெர்லிஸ் மாநிலமும், பேராக் மாநிலத்தின் ஹுலு பேராக் பகுதியும் இதே நிலையைச் சந்தித்து வருகின்றன.
இதற்கு மேலாக, கெடா மாநிலத்தின் குபாங் பாசு, பாடாங் தெராப், லங்காவி, கோலா மூடா, கூலிம் மற்றும் பண்டார் பாரு பகுதிகள் வெப்ப நிலை Tahap 1 (எச்சரிக்கை) நிலையில் உள்ளன.
மேலும், பினாங்கு மாநிலத்தின் வடக்கு மற்றும் திமோர் லாவுட் மாவட்டங்களும் வெப்ப எச்சரிக்கை நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்து, அதிக அளவில் தண்ணீர் குடித்து உடல்நலத்தைப் பாதுகாக்க MetMalaysia அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



