அம்னோவில் Hishammuddin மீண்டும் இணைவாரா? Zahid விளக்கம்!

top-news

ஜூன் 26,

கடந்த 2023 இல் Datuk Seri Hishammuddin Hussein நீக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மீண்டும் அம்னோவில் இணைத்துக்கொள்ளும்படி தொண்டர்கள் விரும்புவதைத் தாம் உணர்ந்திருப்பதாக அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். ஆனால் இது தனிப்பட்ட விவகாரங்களுக்காக நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களால் ஒரு மனதாக எடுக்கப்பட்டது என Datuk Seri Ahmad Zahid Hamidi சுட்டிக்காட்டினார். 


அம்னோ முன்னாள் உதவித் தலைவரான Datuk Seri Hishammuddin Hussein அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாகவும் ஆனால் இப்போது அம்னோவின் Sembrong தொகுதி உறுப்பினர்கள் ஹிஷாமுடீனை மீண்டும் அம்னோவில் சேர்த்துக்கொள்ளும்படி முறையிட்டிருப்பதைக் கட்சியின் தலைவராக நான் மதிக்கிறேன். அவரை நீக்கியது அம்னோ உச்சமன்றம். அதே போல அவரை மீண்டும் அம்னோவில் இணைத்துக்கொள்வதையும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டுமென்றும், ஆனால் இதுவரையில் Datuk Seri Hishammuddin Hussein தரப்பிலிருந்து எந்தவொரு விண்ணப்பமும் அம்னோ பெறவில்லை என Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.


Datuk Seri Ahmad Zahid Hamidi mengesahkan desakan akar umbi untuk menerima semula Datuk Seri Hishammuddin Hussein ke dalam UMNO. Namun, keputusan bergantung kepada Majlis Tertinggi parti dan tiada permohonan rasmi diterima setakat ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *