Cyberjaya மாணவி கொலை! பாலியல் பலாத்காரம் இல்லை!

top-news

ஜூன் 26,

Cyberjaya பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 வயது மாணவியின் உடல் சடமாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகப் பொய் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என Sepang மாவட்டக் காவல் ஆணையர் NORHIZAM BAHAMAN தெரிவித்தார். கடந்த செவ்வாய் கிழமை காலை 10.28 மணிக்கு சைபர்ஜெயாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து 20 வயது பல்கலைக்கழ மாணவியின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தற்போது பிரேதப் பரிசோதனை Sepang மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருவதாகவும் Sepang மாவட்டக் காவல் ஆணையர் NORHIZAM BAHAMAN தெரிவித்தார்.


மாணவியின் தலையில் பலத்த ஆயுதத்தால் தாக்கப்படிருப்பதாகவும் வீட்டில் வேறு எந்தவொரு குற்றச் சம்பவங்களுக்கான அறிகுறிகளும் இல்லை என Sepang மாவட்டக் காவல் ஆணையர் NORHIZAM BAHAMAN உறுதிப்படுத்தினார். அவரின் இறப்புக் குறித்து சமூகவலைத்தலங்களில் அவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகளை Sepang மாவட்டக் காவல் ஆணையர் NORHIZAM BAHAMAN மறுத்தார். முதற்கட்ட பிரேதப் பரிசோதனையில் பாலியல் வன்புணர்வுக்கான எந்தவோர் ஆதாரமும் இல்லை என்றும் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கான எந்தவோர் ஆதாரமும் இல்லை என Sepang மாவட்டக் காவல் ஆணையர் NORHIZAM BAHAMAN தெரிவித்தார்.


Seorang pelajar wanita Universiti Cyberjaya berusia 20 tahun ditemui meninggal dunia dalam keadaan mencurigakan namun siasatan awal polis menafikan sebarang unsur rogol atau pencerobohan. Ketua Polis Daerah Sepang, ACP Norhizam Bahaman menegaskan bahawa tiada bukti penderaan seksual ditemui hasil bedah siasat dan menggesa orang ramai agar tidak menyebarkan spekulasi atau maklumat palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *