வெளிநாட்டு மாணவர்களால் உள்ளூர் மாணவர்களுக்குப் பாதிப்பில்லை! – உயர்கல்வி அமைச்சு!
- Thinagaren Sanggaren
- 21 Aug, 2025
ஆகஸ்ட் 21,
வெளிநாட்டிலிருந்து மலேசியாவில் உயர்கல்வியைத் தொடரும் வெளிநாட்டு மாணவர்களால் உள்ளூர் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு எந்தவொரு சிக்கலும் இருக்காது என உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Zambry Abd Kadir நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். உள்ளூர் மாணவர்கள் UPU வழியாகப் பொதுப்பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதாகவும் வெளிநாட்டு மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விண்ணப்பத்தால் நுழைவதாகவும் Datuk Seri Zambry Abd Kadir விளக்கமளித்தார்.
கடந்த
2024 ஆம் ஆண்டு 497,020 உள்ளூர் மாணவர்கள் பொதுப்பல்கலைக்கழகத்தில் நுழைந்திருப்பதாகவும் 13,986 வெளிநாட்டினர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தில் நுழைந்திருப்பதாகவும் Datuk
Seri Zambry Abd Kadir தெரிவித்தார். மேலும் அரசுப் பொதுப் பல்கலைக்கழகத்தில்
உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதையும் Datuk Seri
Zambry Abd Kadir சுட்டிக்காட்டினார். அதே வேளையில் உள்ளூர் மாணவர்கள்
வெளிநாட்டில் கல்வியைத் தொடர விரும்பும் போது சம்மந்தப்பட்ட நாடு, அவர்கள் நாட்டு மாணவர்களுக்கு நமது பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா
என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்வர் என Datuk Seri Zambry Abd Kadir நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



