தனது காலில் சிறுநீர் கழித்ததற்காக அடவரைக் கொலை செய்த மியன்மார் ஆடவர் கைது!
- Thinagaren Sanggaren
- 02 Nov, 2025
நவம்பர் 2,
நண்பரைக் கொலை செய்த மியன்மார் ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மாதம் பிரிக்பீல்ஸில் உள்ள வணிகக் கடையின் வாசலில் ஆடவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் இன்று கோலாலம்பூர் மஜீஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒரே உணவகத்தில் பணியாற்றும் இருவரும் இடையில் முன் விரோதம் இருந்ததால் கொலை செய்தததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் தனது காலில் சிறுநீர் கழித்ததாகவும் அதனால் கோபப்பட்டு இரவில் அவர் கடையிலிருந்து வெளியேறும் போது அவரைக் கொலை செய்தததாகவும் கைது செய்யப்பட்ட மியன்மார் இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 26 வயது மியன்மார் ஆடவர் UNHCR அடையாள அட்டை கொண்டிருப்பதால் மேலதிக விசாரணை உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் மியன்மார் அகதிகள் குடியிருப்பிலிருந்து மொழிப்பெயர்ப்பாளரை நியமிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரின் ஜாமின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து அடுத்த விசாரணை ஜனவரி 15 மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஆழமான விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



