ஹரிராயா காலத்தில் PLUS நெடுஞ்சாலையில் 2.3 மில்லியன் வாகனங்கள் – அதிக நெரிசல் எதிர்பார்ப்பு

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 12-

வரும் வாரம் நடைபெறவுள்ள ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு PLUS Malaysia Berhad நிர்வகிக்கும் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து, உச்ச நாள்களில் தினமும் சுமார் 2.3 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PLUS நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் ஐரினா நிக் ஜாபார் கூறுகையில், இது சாதாரண தின சராசரியை விட சுமார் 21 சதவீதம் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஹரிராயா பண்டிகைக்கு முன்பாக மார்ச் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அதிகபட்ச போக்குவரத்து காணப்படும். அதேபோல் பண்டிகைக்குப் பிறகு மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பெருமளவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த நிலை கடந்த சீன புத்தாண்டு காலத்திலும் காணப்பட்டது. அப்போது உச்ச நாள்களில் தினசரி வாகன எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியது,” என்று அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டு ஹரிராயா காலத்தில் ஏற்படும் போக்குவரத்து அதிகரிப்பைச் சமாளிக்கும் வகையில் PLUS நிறுவனம் மேற்கொள்ளும் முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற விளக்கக் கூட்டம் மற்றும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *