அம்னோவில் இணைவது உச்சமன்ற கூட்டத்தின முடிவே - அகமட் மஸ்லான்
- Tamil Malar (Reporter)
- 15 Feb, 2026
பொந்தியான், பிப். 15-
எந்த ஒரு அரசியல் தலைவரும் அம்னோ கட்சியில் சேர அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு, கட்சியின் உயர்மட்ட நிர்வாக அமைப்பான Majlis Kerja Tertinggi (MKT) மூலம் மூன்று முக்கியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் என அதன் உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘Rumah Bangsa’, ‘Musyawarah Nasional’ மற்றும் ‘Kolaborasi Agung’ என்ற மூன்று கொள்கைகளே இந்த விவகாரத்தில் வழிகாட்டியாக இருக்கும் என்றார். கட்சியின் வலிமையையும் ஒற்றுமையையும் முன்னிலைப்படுத்தி எந்த முடிவும் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசியல் சூழலில் அனைவரும் பெரிய மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், யாரேனும் கட்சியில் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால், அதை உச்சமன்ற குழு ஆராய்ந்து முடிவு செய்யும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



