RON95 விலை RM1.99 ஆகத் தொடர அரசு முயற்சி – பிரதமர்
- Surendran Sumdraraj
- 09 Mar, 2026
புத்ராஜெயா, மார்ச் 9-
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என்ற நிலையில் தொடர்ந்து வைத்திருக்க அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நிதி அமைச்சராகவும் உள்ள அவர், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மலேசியாவில் பெட்ரோல் விலை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினார். குறிப்பாக இலக்கு வைத்த மானியத் திட்டத்தின் மூலம் RON95 விலை மக்களுக்கு சுமையாக இல்லாத அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
“தற்போது உலக சந்தையில் Brent கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இருப்பினும், நாட்டில் RON95 விலை RM1.99 ஆகத் தொடர அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். பெட்ரோல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசின் முக்கிய பொறுப்பாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சக (KPDN) அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



