மலேசியாவில் ‘மீடியேஷன் மையம்’ அமைக்க அரசு திட்டம் – குறைந்த செலவில் பிரச்சினை தீர்வு
- Surendran Sumdraraj
- 03 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 3-
பொதுமக்களுக்கு எளிதாகவும் குறைந்த செலவிலும் விவகாரங்களைத் தீர்க்கும் வாய்ப்பை வழங்க, மலேசிய மீடியேஷன் மையம் (MMC) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் (சட்டம் மற்றும் நிறுவன மாற்றம்) அமைச்சரான டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சயீட் தெரிவித்ததார்.
இந்த மையம் உருவாக்கப்பட்டால், அனைத்து விவகாரங்களும் கட்டாயமாக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
மீடியேட்டர் (Mediator) மூலம் பிரச்சினைகளைச் சமரசமாக தீர்க்கும் நடைமுறை, நீதிமன்ற வழக்குகளை விட மிகவும் குறைந்த செலவில் இருக்கும். “இது இஸ்லாமில் ‘சுல்ஹ்’ எனப்படும் சமரச முறையைப் போன்றது. இதை நாம் ஊக்குவிக்க விரும்புகிறோம். மக்கள் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்லாமல், முதலில் இங்கு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்,” என்றார்.
மேலும், B40 மற்றும் M40 வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு சிறப்பு மீடியேஷன் சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக 250,000 வெள்ளிக்குக் கீழான வர்த்தக மற்றும் தனிப்பட்ட விவகாரங்களை இந்த மையத்தின் மூலம் தீர்க்கும் வசதியை உருவாக்க அரசு முனைவதாகவும் தெரிவித்தார்.
இந்த முயற்சி, நீதிமன்றத்தின் சுமையைக் குறைப்பதோடு, மக்களுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



