சபாவில் உயர்கல்வி மேம்பாட்டுக்கு RM1.05 பில்லியன் மதிப்பிலான 21 திட்டங்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 7–

சபா மாநிலத்தில் உயர்கல்வித் துறையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் RM1.05 பில்லியன் மதிப்பிலான 21 மேம்பாட்டுத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ சம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மொழி கேள்வி–பதில் அமர்வில் அவர் கூறுகையில், 13-ஆவது மலேசியத் திட்டத்தின் (RMK13) முதல் ரோலிங் திட்டத்தின் (RP1) கீழ் RM160.6 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சபாவில் தரமான உயர்கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சி தேவைகள், தொழில்துறை தேவைகள் மற்றும் தேசிய இலக்குகளுக்கு ஏற்ப கல்வித் திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதிலும் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

சபா மாணவர்கள் உயர்கல்விக்காக தீபகற்ப மலேசியாவுக்குச் செல்ல வேண்டிய நிலையைக் குறைப்பதன் மூலம், கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவு மற்றும் குடும்பங்களின் நிதிச் சுமையையும் குறைப்பதே இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சர் விளக்கினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *