மடானி ‘பக்தி’ தைப்பூசம் 2026 தைப்பூசத் திருவருளில் தழைக்கும் சேவை, தியாகம், சமரச நல்லிணக்கம்!
- Tamil Malar (Reporter)
- 28 Jan, 2026
புத்ராஜெயா, ஜன. 28-
தைப்பூசப் பெருவிழாவினை முன்னிட்டு, மனிதவள அமைச்சு (KESUMA), "மலேசிய மாடானி (MADANI) பக்தி: தைப்பூசம் 2026" எனும் உன்னதத் திட்டத்தை முன்னெடுக்கிறது. மனிதநேயம், சமூக மேம்பாடு, வருங்கால வேலைவாய்ப்புச் சந்தை ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் 'மலேசியா மாடானி' கோட்பாட்டிற்கு இணங்க; சேவை, நல்லிணக்கம், ஒருமைப்பாடு ஆகிய விழுமியங்களை மக்களிடையே வேரூன்றச் செய்யும் ஒரு பாலமாக இத்திட்டம் அமைகின்றது. பொதுமக்களுக்கான சேவைகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் வாயிலாக சமூகத்தை அணுக்கப்படுத்தும் நோக்கில், அமைச்சின் இந்தத் தைப்பூசப் பெருந்தொண்டானது மூன்றாவது ஆண்டாகத் தொடர்கிறது.
இத்திட்டமானது, ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நான்கு (4) நாட்கள் சிறப்புற
நடைபெறும். கோலாலம்பூர், பத்துமலை திருத்தலத்தில் அமைகின்ற அமைச்சின் சேவை மையங்கள்
நாள்தோறும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். அர்த்தமுள்ள
இத்திருவிழாக் கொண்டாட்டங்களின் ஊடே வெளிப்படைத்தன்மை மற்றும்
பரஸ்பர மரியாதையைப் பேணி, இந்தியச் சமூகத்தினர் தங்களுக்குத் தேவையான சேவைகள், தகவல்கள் மற்றும் திறன்
மேம்பாட்டு வாய்ப்புகளைத் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்வதே இம்முயற்சியின் உன்னத
நோக்கமாகும்.
இத்திட்டத்தின் உச்சகட்ட நிகழ்வாக, 2026 ஜனவரி 30 (வெள்ளிக்கிழமை) அன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுடன் இணைந்து, தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ளார். இந்த வருகையானது, 'மலேசியா மாடானி' (Malaysia MADANI) தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நல்லிணக்கம், உள்ளடக்கியத் தன்மை, ஒற்றுமையின் அடிப்படையில் மக்களை அரவணைக்கும் அரசாங்கத்தின் தொடர் ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் பறைசாற்றுவதாக அமையும்.
இவ்விழா நடைபெறும் நாட்களில், வருகை தரும் பொதுமக்கள் KESUMA அமைச்சின் சிறப்பு சேவைப் பந்தலில் (Booth), மக்கள் நலன் சார்ந்த பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகளை நேரடியாகப் பெற்றுப் பயனடையலாம். சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் போன்ற வாழ்வாதாரத்திற்குத் தேவையான முக்கிய அம்சங்களை உள்ளடக்கி, அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகள் வழங்கும் சிறப்புச் சேவைகள் வருமாறு:
• HRD Corp (மனிதவள மேம்பாட்டுக்
கழகம்)
MISI 1.0 மற்றும் MISI 2.0 வெற்றிப் பயணங்களின் பகிர்வுகள், வெற்றி மாடானி (VETRI MADANI) திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் e-LATiH கற்றல் மையத்தை அணுகும் வசதி.
• PERKESO (பெர்கேசோ / சமூகப் பாதுகாப்பு
அமைப்பு)
அனைத்து சமூகப் பாதுகாப்புச் சட்டங்களையும் உள்ளடக்கிய PERKESO LINDUNG சேவை மையம், நடமாடும் மருத்துவப் பரிசோதனைப் பேருந்து வசதி மற்றும் தொழில்முறை விவரக்குறிப்பு (Career Profiling) சேவைகள்.
• PTPK (திறன் மேம்பாட்டுக் நிதி
நிறுவனம்)
MyPerkasa TVET இணையப்பக்கப் பதிவு, கல்விக்கடன் மறுசீரமைப்பு மற்றும் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தகுதிக்கான மதிப்பீட்டுச் சேவைகள்.
• NIOSH (தேசியப் பணியிட
பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிறுவனம்)
பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த திட்டங்கள், விழிப்புணர்வுப் பயிற்சிகள் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality - VR) வாயிலான நவீனத் தொழில்நுட்ப விளக்கங்கள்.
• TalentCorp (டேலன்ட் கார்ப்பரேஷன்)
MyMahir SkillsLab திறன் ஆய்வகம், MISI 2.0 வெற்றிப் பகிர்வுகள் மற்றும் புதிய பதிவுகள், அத்துடன் இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான தொழில் பழகுநர் (Internship) வாய்ப்புகள் மற்றும் ஊக்குவிப்புச் சலுகைகள் குறித்த தகவல்கள்.
இத்திட்டத்தின் அனைத்து அம்சங்களும், வெறும் சேவைகளாக மட்டுமன்றி பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த தூண்டுதலையும், கற்றலையும், வருங்காலத்திற்கான முறையான திட்டமிடலையும் நேரடியாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எனவே, KESUMA அமைச்சின் இத்தகைய நேரடிச் சேவைகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்முறை ஆதரவுகளைப் பெற்றிடப் பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம். நாட்டின் மனிதவள மேம்பாட்டையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரச் சந்தையையும் வலுப்படுத்துவதில் KESUMA கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதியினை இம்முயற்சி பறைசாற்றுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



