மடானி அரசு இருக்கும் வரையில் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது-கல்வி அமைச்சர்

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், டிச. 9-

மடானி அரசு ஆட்சியில் உள்ள வரையில் இந்நாட்டில் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என கல்வி அமைச்சர் படிலீனா சிடேக் நம்பிக்கை தெரிவித்தார். இந்நாட்டில் வெர்னாகுலர் பள்ளிகள் இயங்குவதற்கு கல்வி சட்டம் முழு உரிமையையும் அளித்துள்ளது. ஆகவே கல்வி சட்டத்தின் அடிப்படையில் நமது நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை உறுதி செய்ய, பள்ளியைப் பாதுகாக்க மடானி அரசாங்கம் ஒருபோது மறவாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று தலைநகர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற கூட்டரசு பிரதேச, சிலாங்கூர் மாநிலங்களின் பள்ளிகளுக்குத் திறன்பலகை அளிக்கும் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட அவர் அவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சி நண்பகல் 1 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணியளவில் முடிவுற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சருடன், தொழில்முனைவர், கூட்டுறவு வளர்ச்சி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், கல்வித் துணை அமைச்சர் வோங் காக் வோ, நாட்டு திடக் கல்வி அறக்கட்டளையின் தலைமை செயல்முறை அதிகாரி முகமட் ரசி ஜாபர், கூட்டரசு பிரதேச கல்வி இயக்குநர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், கோலாலம்பூர், கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *