ஈரானில் உள்ள மலேசியர்களின் நலன் பாதுகாக்கப்படும்– வெளிவிவகார அமைச்சு உறுதி
- Surendran Sumdraraj
- 27 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 27-
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள மலேசியப் பிரஜைகளின் நலன் குறித்து வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில், பாதுகாப்பு மற்றும் தூதரக நல சேவைகள் என்பதே அமைச்சின் முக்கிய கவனமாக இருப்பதாக கூறியது. அந்நாட்டில் தன்னார்வத்துடன் தங்கியிருக்கும் மலேசியர்களுக்கு தேவையான தூதரக உதவிகள் மற்றும் சேவைகள் இடையறாது வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.
“ஈரானில் தங்கத் தீர்மானித்துள்ள மலேசியப் பிரஜைகளுக்கு தேவையான உதவிகளை அமைச்சு தொடர்ந்து வழங்கும்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, வெளிவிவகார அமைச்சர் முகமது ஹாசான், தற்போது 13 மலேசியர்கள் ஈரானில் இருப்பதுடன், அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பாமல் அங்கேயே தங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
ஈரான்–அமெரிக்கா இடையேயான பதற்றமான நிலைமையை முன்னிட்டு, அரசாங்கம் அந்நாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பை மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுகி வருவதாகவும், அவசர தேவைகள் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



