இறையாண்மை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் - பாஸ்

top-news

கோலாலம்பூர், டிச. 23-

பாஸ், அரசாங்கமும் அதிகாரிகளும் கூட்டரசு அரசியலமைப்பின் கொள்கைகளின்படி தைரியமாக, வெளிப்படையாகவும் விசுவாசமாகவும் செயல்பட்டு, மாட்சிமை தங்கிய மாமன்னரின் கௌரவத்தையும் மலாய் அரசர்களின் இறையாண்மையையும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இது, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் மூலம் மீதமுள்ள சிறைத்தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கக் கோரிய நீதி மறுஆய்வு மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தகியுடின் ஹசான், நஜிப் உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யும் உரிமையை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார். ஒவ்வொரு நபருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மேல்முறையீடு உரிமையும் அடிப்படை உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

"நீதித்துறையின் முடிவுகளை எப்போதும் மதிக்க வேண்டும், ஏனெனில் அது சட்டத்தின் இறையாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்று. ஆயினும், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனி மனித சுதந்திரம் மறுக்கப்படக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *