இழப்பீட்டு விவகாரம் நீதிமன்றம் முடிவு செய்யும் – ஹன்னா இயோ
- Surendran Sumdraraj
- 08 May, 2026
புத்ரா ஜெயா, மே 8-
கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஏற்பட்ட மண் குழி விபத்தில் உயிரிழந்த இந்தியப் பெண் சுற்றுலாப் பயணியினரின் குடும்பத்தினர் கோரும் இழப்பீட்டு விவகாரம் நீதிமன்றத்தின் முடிவுக்கு விடப்படுவதாகக் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற சம்பவத்தை தங்களது நிர்வாகம் இதற்கு முன் எதிர்கொண்டதில்லை என்றும் கூறினார்.
“இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம். தற்போது மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் ஓரளவு நிம்மதி அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
மேலும், “இழப்பீட்டு கோரிக்கை தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்,” என்றும் ஹன்னா இயோ தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



