எரிபொருள் மானியத்திற்கு மணிநேரத்திற்கு RM8.28 மில்லியன் – அரசின் பெரும் சுமை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 27-

உலகளாவிய எரிபொருள் வழங்கல் நெருக்கடியின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மலேசிய அரசு தற்போது மிகப்பெரிய மானியச் சுமையை ஏற்று வருகிறது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சுமார் RM8.28 மில்லியன், அதாவது ஒரு வினாடிக்கு RM2,300 வரை செலவழித்து வருவது தற்போதைய நிலையை வெளிப்படுத்துகிறது.

மத்திய கிழக்கில் உருவான புவியியல் அரசியல் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலை மார்ச் மாதத்தில் ஒரு பேரலுக்கு AS$110-ஐ கடந்தது. இந்த நிலை அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருந்ததால், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைத் தடுக்க அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரதமர் அலுவலகத்தின் பொருளாதார ஆலோசகர் நுர்ஹிஷாம் ஹுசைன் கூறுகையில், மார்ச் மாதத்தில் மட்டும் RM6 பில்லியன் மானியம் வழங்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் அது RM7 பில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அளவிலான மானியச் செலவு நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். எனவே, எதிர்காலத்தில் மானியத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *