அரசுச் சாலைகள் தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதி இல்லை – அரசு உறுதி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 25 –

அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள பொது சாலைகள், குறிப்பாக முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவோ அல்லது ஒப்படைக்கவோ அரசு அனுமதிக்காது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் சையத் இப்ராஹிம் சையத் நோ கூறுகையில், இவ்வகை சாலைகள் நாட்டின் மூலதனச் சொத்துகளாகவும் மக்களுக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகளாகவும் உள்ளதால், அவற்றின் உரிமை அரசிடம் தொடரும் என்றார்.

அவர் மேலும் விளக்குகையில், தனியார் துறையின் பங்கு சாலை மேலாண்மை அல்லது பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படும். இத்தகைய பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நிலத்தின் உரிமையிலும் சாலையின் பொது அந்தஸ்திலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்றார்.

பொதுமக்களின் நலனையும் சாலை அணுகும் உரிமையையும் பாதுகாக்கும் நோக்கில், சாலை மூடல், அகற்றல் அல்லது அந்தஸ்து மாற்றம் போன்றவை கடுமையான சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவை. இவ்வாறான மாற்றங்களுக்கு தொடர்புடைய அதிகாரிகளின் ஆய்வும் மாநில அரசின் அனுமதியும் அவசியம்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *