இது மடானி அரசு இல்லை! இது முட்டாள் அரசு! – பெரிக்காத்தான் MP சாடல்!
- Thinagaren Sanggaren
- 31 Oct, 2025
அக்தோபர் 31,
மடானி அரசு எனும் பெயரில் முட்டாள் அரசின் ஆட்சி நடப்பதாகப் பெரிக்காத்தானின் Machang நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal கடுமையாகச் சாடினார். நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் TAN SRI JOHARI அமேரிக்காவுடன் மலேசியா கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதம் நடத்தப்படும் என தெரிவித்தார். கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பெரிக்காத்தானின் எல்லா கேள்விகளுக்கும் நாடாளுமன்றத்தில் வர்த்தக முதலீடு தொழில்துறை அமைச்சர் TENGKU ZAFRUL பதலளிப்பார் என சபாநாயகர் TAN SRI JOHARI உறுதியளித்தார்.
ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் வர்த்தக முதலீடு தொழில்துறை அமைச்சர் TENGKU ZAFRUL வரவே இல்லை. இப்போது பெரிக்காத்தான் யாரிடம் கேள்வி கேட்பது? உண்மையிலேயே இது அரசாங்கமா? மக்களுக்கு அளித்த போலியான வாக்குறுதிகளை நாடாளுமன்றத்திலும் இவர்கள் அளிக்கிறார். இது மடானி அரசு அல்ல. முட்டாள் அரசு என Machang நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal கடுமையாகச் சாடினார். இன்று வெள்ளிக் கிழமை என்பதால் தொழுகைக்கான ஓய்வு நேரம் அதிகரிக்கபடவிருப்பதால் கேள்விகளை எழுத்துப்பூர்வமாக அனுப்பும்படி மக்களவை வலியுறுத்தியிருப்பதை Machang நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



