பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்! ஐவர் காயம்!

top-news

ஏப்ரல் 6,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த ஐவர் காயங்களுடன் தப்பியதாக RANAU மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் WASLIE SAUPIN தெரிவித்தார். நேற்று மாலை ரானாவ்விலிருந்து தம்புனான் செல்லும் சாலையில் பிற்பகல் 3.46 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார். 

கட்டுப்பாட்டை இழந்த PERODUA AXIA ரக வாகனம் சாலையிலிருந்து விலகி 6 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் வாகனத்தாலிருந்த ஐவரில் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நால்வர் சிராய்ப்புக் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் RANAU மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் WASLIE SAUPIN தெரிவித்தார். விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Sebuah kereta Perodua Axia terbabas dan terjunam ke dalam gaung sedalam 6 meter di jalan Ranau-Tambunan. Lima penumpang cedera, termasuk pemandu yang dimasukkan ke hospital. Tiada kematian dilaporkan, siasatan lanjut dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *