யானையை மோதிய வாகனம்! ஆடவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல்17,

சாலையைக் கடந்துக் கொண்டிருந்த யானையை மோதி வாகனம் விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி படுகாயம் அடைந்திருப்பதாகவும் யானை சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.30 மணிக்குக் குளுவாங்கிலிருந்து KAHANG செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. சாலையின் மின்விளக்குகள் பழுதடைந்திருப்பதால் சம்மந்தப்பட்ட சாலை இருள் சூழ்ந்திருந்தால் யானை சாலையைக் கடப்பதை அறியாத வாகனமோட்டி யானையை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட 49 வயது வாகனமோட்டி சிகிச்சைக்காக குளுவாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், யானை சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட சாலையில் மின்விளக்குகள் சரி செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *