யானையை மோதிய கார்! முதியவர் படுகாயம்!

top-news

மார்ச் 14,

மெர்சிங் சாலையில் சாலையைக் கடக்க முயன்ற யானையின் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 70 வயது முதியவர் படுகாயம் அடைந்ததாகவும் யானை சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தது. இரவு 9 மணியளவில் மெர்சிங்கிலிருந்து Nitar செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக மெர்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Razak Abdullah Sani தெரிவித்தார்.

யானைகள் கும்பலாகச் சாலையைக் கடக்கும் போது குட்டி யானையின் மீது 70 வயது முதியவர் Toyota Altis ரக வாகனம் மோதியதாகத் தெரிய வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவரைப் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் விபத்தில் சிக்கிய குட்டி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெர்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Razak Abdullah Sani தெரிவித்தார்.

Seorang lelaki warga emas cedera selepas kereta Toyota Altis yang dipandunya melanggar seekor anak gajah yang sedang melintas jalan di Mersing. Anak gajah itu mati di tempat kejadian sementara mangsa dibawa ke hospital untuk rawatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *