மரத்தில் மோதிய கார்! இளம் அதிகாரி பலி! மற்றொருவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 26,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயது இளைஞர் பலியானதுடன் உடன் பயணித்த மற்றோர் ஆடவர் படுகாயம் அடைந்தார். இன்று அதிகாலை 6.10 மணிக்கு Jalan Gong Badak சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Kuala Terengganu மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.

வாகனமோட்டியான 25 வயது இளைஞர் போக்குவரத்து நிறுவனத்தின் அமலாக்க அதிகாரியாக இருந்த Ahmad Zabani என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் Kuala Terengganu மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor உறுதிப்படுத்தினார். வாகனத்திலிருந்து 38 வயதான மற்றொரு நபர் படுகாயம் அடைந்த நிலையில் Sultan Zainal Abidin அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் Kuala Terengganu மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *