வாகனத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தாய் மகளின் உடல்கள்!
- Thinagaren Sanggaren
- 19 Sep, 2025
செப்டம்பர் 19,
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து இருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டிருப்பதை அடுத்து இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12.24 மணியளவில் சந்தேகத்திற்குரிய வாகனம் ஆயேர் கெரோ Jalan Solok Hilir சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகாரைப் பெற்றதும் சம்பவ இடத்திலிருந்த வாகனத்தைக் காவல்துறையினர் சோதனையிட்டதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.
வாகனத்திலிருந்து
மீட்கப்பட்ட இருவரும் ஆலோர் காஜா Taman Kelemak Jaya குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 57 வயது Zabanah Abu Hussin. 25 வயது Nur Shafiqah Othman என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும்
இருவரும் ஒரே குடும்பத்தைத் சேர்ந்த தாய் மகள் என கண்டறியப்பட்டிருப்பதாகவும் மலாக்கா
மாநிலக் காவல்துறை தலைவர் Datuk
Dzulkhairi Mukhtar தெரிவித்தார். வாகனத்தில் எந்தவொரு குற்றவியல்
கூறுகளும் இல்லை என்பதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்திருப்பதாகவும் மேலதிக விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



