கார் மோதியதில் இளம் மோட்டார் சைக்கிளோட்டி பலி! காவல்துறை விசாரணை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 17,

தலைநகர் Kuchai Lama சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாகும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவிய நிலையில் விபத்துக் குறித்து காவல்துறையினர் மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார். இது தொடர்பான காணொலி தனிநபர் ஒருவரால் சமூகவலைத்தலத்தில் பதிவேற்ற செய்யப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட நபரைச் சாட்சியம் அளிக்க காவல்துறை முனைந்திருப்பதாக Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார். 

இச்சம்பவம் கடந்த டிசம்பர் 8 அதிகாலை 12.10 மணிக்கு நிகழ்ந்திருப்பதாகக் காணொலியில் காணப்பட்டாலும் காவல்துறையின் விசாரணையில் அது இன்னும் உறுதிப்படுத்தவில்லை என Mohd Zamzuri Mohd Isa தெரிவித்தார். விபத்தில் 25 வயது E-Hailing மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்திருப்பதாகக் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஸ்ரீ பெட்டாலிங்கிலிருந்து ஜாலான் குச்சாய் லாமா நோக்கி சொல்லும், ஒரு வளைவைக் கடக்கும் போது, பின்னிருந்து மற்றொரு சாலையில் வந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியதாகத் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *