சாலையோரக் கடையை வாகனம் மோதியதில் 3 சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

top-news

ஜூன் 16,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரக் கடையை மோதி விபத்துக்குள்ளானதில் கடையிலிருந்த 3 சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம் அடைந்தனர். கேமரன் மலையின் Jalan Kea Farm எனும் சுற்றுலாத் தலத்தின் வாசலில் நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Cameron Highlands, மாவட்டக் காவல் ஆணையர் Azri Ramli தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நால்வரும் கேமரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபாயக்கட்டத்தைத் தாண்டியிருப்பதாகவும் Cameron Highlands, மாவட்டக் காவல் ஆணையர் Azri Ramli உறுதிப்படுத்தினார். 

22 வயது வாகனமோட்டிக்குத் திடிரென வலிப்பு வந்ததால் கட்டுப்பாட்டை இழந்தது சாலையிலிருந்து விலகி கடையை மோதியதாக நம்பப்படுகிறது. விபத்து ஏற்பட்டதும் பொதுமக்கள் வாகனத்தின் அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வாகனமோட்டியைத் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலிருந்த ரோந்து பணி காவல் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்தியதாகவும் Cameron Highlands, மாவட்டக் காவல் ஆணையர் Azri Ramli தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 2 முதல் 10 வயதுள்ள 3 சிறுவர்கள் 24 வயது இளைஞர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


Empat orang termasuk tiga kanak-kanak berusia 2 hingga 10 tahun cedera selepas sebuah kereta hilang kawalan dan merempuh kedai tepi jalan di Kea Farm, Cameron Highlands. Pemandu berusia 22 tahun dipercayai diserang sawan semasa memandu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *