பள்ளத்தில் சறுக்கிய கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்!

top-news

ஏப்ரல் 3,

மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் (WCE) கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 1.32 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் 12 மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டதாக Perak மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

வாகனத்திலிருந்த 52 வயது பெண் படுகாயம் அடைந்த நிலையில் 28 வயது இளைஞரும் 55 வயது ஆடவரும் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாக Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். விபத்தில் சிக்கிய மூவரின் உயிருக்கும் எந்தவோர் ஆபத்துமில்லை என்றும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Perak மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Sebuah Honda City terbabas masuk parit di Lebuhraya WCE, Manjung. Tiga sekeluarga terselamat, seorang wanita cedera di kaki dan tangan. Bomba menerima panggilan pada 1.32 pagi dan menggunakan peralatan hidraulik untuk menyelamatkan mangsa sebelum diserahkan kepada KKM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *