கால்வாயில் கவிழ்ந்த கார்! இளம்பெண் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 12 Mar, 2025
மார்ச் 12,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 வயது இளம்பெண் படுகாயம் அடைந்தார். நண்பகல் 1 மணிக்குக் கோத்தா கினாபாலு மீட்பு ஆணையத்திற்குத் தகவல் கிடைத்த நிலையில் பாதிக்கப்பட்டவரை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா கினாபாலுவிலிருந்து Kendara Court செல்லும் சாலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வரும்நிலையில் விபத்தை நேரில் கண்டவர்கள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
Seorang akauntan wanita berusia 25 tahun terselamat selepas kereta Axia miliknya terjunam ke dalam parit monsun berhampiran Kendera Court, Kota Kinabalu. Lokasi itu pernah mencatat beberapa kemalangan sebelum ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *