ECRL கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!
- Tamil Malar (Reporter)
- 19 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 19-
நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஜாலான் லிங்காரன் தெங்கா 2 (MRR2) FT28, பத்து கேவ்ஸ் திசையில் நடந்த விபத்தில் சுசுகி ஸ்விப்ட் கார் மீது தற்காலிக இரும்புக் கூரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடைபெற்று வந்த கிழக்கு கடற்கரை ரயில் திட்ட (ECRL) கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
திட்ட உரிமையாளரான மலேசியா ரயில் லிங்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விபத்து குறித்து அதிகாரிகள் முழு விசாரணை நடத்தும் வரை அனைத்துப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.
மேலும், பாதிக்கப்பட்ட கார் உரிமையாளருக்கு உடனடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளையும் காப்பீட்டு நடைமுறைகளையும் காத்திருக்காமல் உதவி செய்யப்படும் என்றும் எம்.ஆர்.எல் அறிவித்துள்ளது.
ECRL திட்டத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த நிறுத்தம் பணிகளின் பாதுகாப்புத் தரத்தை மறு ஆய்வு செய்ய வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



