‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ மீதான விசாரணை
- Tamil Malar (Reporter)
- 10 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ.
11-
கடமையில்
ஈடுபட்டிருந்த காவலர்களை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் காவல் அதிகாரி ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ மீதான விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக ஏழு சாட்சிகள், அவர்களில் அந்த சம்பவத்தின்போது
காவலர்களால் பரிசோதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஆண் ஒருவர் உட்பட, வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோலாலம்பூர்
காவல் துறைத் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ்
கூறுகையில், இந்த
வழக்கின் விசாரணை ஆவணங்கள் இன்று டிபிஆர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்தார். விசாரணை ஆவணங்கள் அனுப்பப்பட்டுவிட்டன, மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான
உத்தரவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று
அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



