ஐபிஜி மாணவர்கள் உயிரிழப்பு: வெளிப்புற செயல்பாடுகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – லீ லாம் தாய் வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 12 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 12-
கடந்த சனிக்கிழமை கெடா மாநிலத்தின் சுங்கை பட்டானி அருகிலுள்ள பந்தாய் மெர்டேக்காவில் இரண்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரி (IPG) மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வெளிப்புற நடவடிக்கைகளுக்கான நிலையான செயல் நடைமுறைகளை (SOP) கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சமூக இணைப்பு அமைப்பின் தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தாய் கூறுகையில், ஏப்ரல் 4ஆம் தேதி நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.
“ஒரு விபத்து அல்லது உயிரிழப்பு நடந்த பிறகே ஏன் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அனைவரும் கவனம் செலுத்துகின்றனர்? என்ற கேள்வி தற்போது எழுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது சம்பவம் நடந்த பின் எதிர்வினை அளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும், எந்த நடவடிக்கையும் தொடங்குவதற்கு முன்பே முன்கூட்டியே திட்டமிட்டு, தொடர்ந்து, முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, குறிப்பாக வெளிப்புற நிகழ்ச்சிகள், முகாம்கள், விளையாட்டு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் விரிவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



