கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்! அம்னோவிலிருந்து புதிய கல்வி அமைச்சர்! – பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 12,

பள்ளிக்கூடங்களில் நிகழ்த்தப்படும் பகடிவதைகளைத் தடுக்க கல்வி அமைச்சு தவறிவிட்டதால் கல்வி அமைச்சர் Fadhlina Sidek பதவி விலக வேண்டும் என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரும்  Alor Setar நாடாளுமன்ற உறுப்பினருமான Afnan Hamimi Taib Azamudden வலியுறுத்தினார். பகடிவதைகளுக்கு எதிராகக் கல்வி அமைச்சு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் பள்ளிகளுக்குள் கட்டொழுக்கமின்றி செயல்படும் மாணவர்களைக் கல்வி அமைச்சு கட்டுப்படுத்த எந்தவொரு திட்டங்களையும் வகுக்கவில்லை என  பாஸ் கட்சியின் Afnan Hamimi Taib Azamudden கல்வி அமைச்சர் Fadhlina Sidek மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கல்வி அமைச்சர் பதவியை விலகினாலும் அந்த பதவிக்குப் பாஸ் கட்சியிலிருந்து யாரையும் நியமிக்க வேண்டாம், உண்மையில் கல்வி அமைச்சராகும் அனைத்து தகுதியும் அம்னோவின் பொதுச் செயலாளரான Datuk Dr Asyraf Wajdi Dusuki இருக்கிறது என்றும் பாஸ் கட்சியின் Afnan Hamimi Taib Azamudden தெரிவித்தார். மாரா உயர்க்கல்விக் கூடங்களில் ஏற்பட்ட பகடிவதைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்த Datuk Dr Asyraf Wajdi Dusuki பள்ளிகளில் நிலவும் பகடிவதைகளைக் கட்டுப்படுத்த துணிச்சல் மிக்கவர் என பாஸ் கட்சியின் Afnan Hamimi Taib Azamudden வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *