அரசை கவிழ்க்க முயற்சி வழக்கு: வான் சைபுல் விசாரணைக்கு அழைப்பு
- Surendran Sumdraraj
- 11 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 11-
அரசை கவிழ்க்க முயற்சி தொடர்பான விசாரணையில், தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் அதிகாரிகளால் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு அறிக்கையில் அவர் கூறியதாவது, தன்னை ஏன் விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்கள் தொடர்பான காவல் புகாரின் அடிப்படையில் குற்றச் சட்டத்தின் 124B பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிகிறது என்றார்.
“கல்வித்துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த சில நண்பர்கள் ஏற்கனவே போலீசால் அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். நானும் இன்று வாக்குமூலம் அளிக்கப் போகிறேன். ஆனால் என்ன காரணத்திற்காக அழைக்கப்பட்டேன் என்பது தெளிவில்லை,” என அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சியை இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தும் முயற்சி ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
குற்றச் சட்டத்தின் 124B பிரிவு என்பது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்பை வன்முறையால் அல்லது அரசியல் சட்டத்திற்கு முரணான முறையில் கவிழ்க்க முயற்சிப்பதைக் குறிக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



