மசூதியில் கலவரம்! 15 முதல் 27 வயதுள்ள 9 பேர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 20 Mar, 2026
மார்ச் 20,
மசூதியின் வாசலில் ஆடவர் ஒருவரைச் சமாரியதாகத் தாக்கி கொலை முயற்சி செய்ததாகக் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று நீதிமன்ற விசாரணைக்காக மலாக்கா Ayer Keroh Majistret நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். நீதிமன்ற விசாரணையில் கைது செய்யப்பட்ட 15 முதல் 27 வயதுள்ள 9 பேரும் குற்றத்தை மறுத்து மேலதிக விசாரணையுடன் ஜாமின் கோரிக்கையை முன்வைத்தனர். கடந்த மார்ச் 15 மலாக்கா Kampung Tanjung பகுதியில் தங்கள் மீது பொய்யாகக் காவல்துறையில் புகார் அளித்த நபரை மிரட்டியாக 15 வயது மாணவன் வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில் கலவரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி Ayer Keroh Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதிக்கப்பட்ட ஆடவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் காவல்துறையின் காவலுடன் கூடிய ஜாமினை வழங்குவதுடன் தலா 2,000 ரிங்கிட் ஜாமின் வழங்குவதாக Ayer Keroh Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை அடுத்த மே மாதம் நடைபெறும் வரையில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து சந்தேக நபர்கள் விலகி இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



