கனரக வாகனங்களின் விபத்துகள் குறைந்துள்ளது– போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

top-news

கோலாலம்பூர்,  ஜன. 21-

கடந்த ஆண்டில் கனரக வாகனங்கள் தொடர்பான பயங்கர விபத்துகள் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், மலேசியாவில் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டோனி லோக் தெரிவித்தார்.

மலேசிய காவல்படை தரவுகளின் ஆரம்ப கணக்கீட்டின்படி, கடந்த ஆண்டில் கனரக வாகனங்களில் (லாரிகள், டிரெய்லர்கள், மற்ற வாகனங்கள்) சம்பந்தப்பட்ட பயங்கர விபத்துகள் 163-ஆக பதிவாகியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டில் பதிவான 260 சம்பவங்களுடன் ஒப்பிடும் போது சாதகமான குறைவு எனவும், 2023-ஆம் ஆண்டில் பதிவான 232 சம்பவங்களுடன் ஒப்பிட்டால் கூட முன்னேற்றம் காணப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *