பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்! மத ஆசிரியர் கைது!
- Thinagaren Sanggaren
- 25 Dec, 2025
டிசம்பர் 25,
பள்ளி வளாகத்தில் 12 வயது மாணவியைப் பாலியல் சீண்டல் செய்ததாக 52 வயது மத ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்தா பாருவில் உள்ள ஒரு தேசிய பள்ளியின் மத ஆசிரியரான 52 வயது நபர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவிகளைப் பாலியல் சீண்டல் செய்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த டிசம்பர் 23 கோத்தா பாரு காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து இன்று காலை 52 வயது மத ஆசிரியர் தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையுடன் ஜாமின் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
கோத்தா பாருவில் உள்ள ஒரு தேசிய பள்ளியின் விளையாட்டு அறையிலும், வகுப்பறையிலும் தாம் பாலியல் சீண்டலுக்குள்ளானதாகப் புகார் அளித்த 12 வயது மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கோத்தா பாரு SESYEN நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவரின் மீதான வழக்கை அடுத்த ஜனவரி 26 மீண்டும் விசாரிக்கவிருப்பதாகவும் 7 குற்றச்சாட்டுகளுக்கும் RM55,000 ஜாமின் வழங்கி நீதிபதி Tengku Shahrizan Tuan Lah உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு பள்ளி காலாண்டு தொடங்கும் முன்னரே சம்மந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் தடயவியல் நிபுணர்கள் மீண்டும் பரிசோதனை செய்யும்படி நீதிபதி Tengku Shahrizan Tuan Lah உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



