கோயிலில் மது அருந்தி ஆர்ப்பாட்டம் செய்த ஆடவர் கைது! – அம்பாங் காவல்துறை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 30,

கோயிலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வழிப்பாட்டின் போது பொருள்களை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்த ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்திருப்பதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam தெரிவித்தார். நேற்று இரவு அம்பாங்கில் உள்ள Jalan Merdeka, Kampung Baru பெளத்த கோயிலில் ஆர்ப்பாட்டம் செய்த ஆடவரைப் பொதுமக்கள் கண்டித்ததால் அவர் கோபமடைந்து வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை உடைத்ததாகத் தெரிய வந்துள்ளது. 

வழிபாட்டிலிருந்த பொதுமக்கள் சம்மந்தப்பட்ட ஆடவரை மடக்கி பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததும் காவல் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆடவரைக் கைது செய்ததாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் 35 வயது உள்ளூர் ஆடவர் என்றும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *