பினாங்கில் 4,080 குழந்தைகள் பாதிப்பு! – அதிகரிக்கும் குழந்தைகள் வன்கொடுமை!

top-news

மே 27,

பினாங்கில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகப் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Lim Siew Khim தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டுமே பினாங்கில் 201 குழந்தைகள் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் மொத்தம் 4,080 குழந்தைகள் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பினாங்கு மாநிலச் சமூகநல மேம்பாடு நலத்துறை ஆட்சிக் குழு உறுப்பினரான Lim Siew Khim தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 113 சிறுமிகளும் 88 சிறுவன்களும் குழந்தைகள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் பாலியல் வன்கொடுமைகளும் உள்ளடக்கியிருப்பதாகவும் Lim Siew Khim தெரிவித்தார். கடந்த ஆண்டு 519 குழந்தைகள் வன்கொடுமை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் இந்தா ஆண்டு குழந்தைகள் பாதுகாப்புகள் குறித்தான விழிப்புணர்வுகளை மாநிலச் சமூகநலத்துறையின் மூலமாக நடத்தி வருவதாகவும் Lim Siew Khim தெரிவித்தார்.

Sebanyak 201 kes penderaan kanak-kanak telah direkodkan di Pulau Pinang setakat April tahun ini, menjadikan jumlah keseluruhan sejak 2010 sebanyak 4,080 kes, termasuk penderaan seksual, menurut Exco negeri Lim Siew Khim.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *