வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்ட குழந்தை எலும்புக்கூடு வழக்கு: 5 பேருக்கு ரிமாண்ட் நீட்டிப்பு

top-news
FREE WEBSITE AD

அலோர் காஜா, மார்ச் 30-

ஒரு வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து பேரின் ரிமாண்ட் காலம் இன்று மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார், 14 முதல் 40 வயதுக்குள் உள்ள சந்தேக நபர்கள் மீது மூன்று நாட்கள் கூடுதல் ரிமாண்ட் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவித்தார். இந்த ரிமாண்ட் புதன்கிழமை வரை அமலில் இருக்கும் என அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், 19 வயதான இளம் பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவருடன் அவரது தாய், அக்கா, தம்பி மற்றும் காதலன் ஆகியோர் அடங்கும் நால்வர் குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை ஆவணம் இன்று துணை பொது வழக்கறிஞரிடம் (DPP) சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும், அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் அதன்படி தீர்மானிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *