முகைதீன் யாசின் ஊழல் வழக்கு விசாரணை - நாளை தொடக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8-

முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான தான் ஸ்ரீ முகைதின் யாசின் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.

ஜானா விபாவா (Jana Wibawa) திட்டத்தைச் சுற்றி எழுந்த ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர்மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் காலத்தில், பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான முகைதின் யாசின் அடுத்த மூன்று நாட்கள் குற்றவாளி இருக்கையில் நிற்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கை நீதிபதி நூர் ரூவேனா தலைமையில் விசாரிக்கவுள்ளார். விசாரணையின் முதல் நாளில், வழக்குத் தொடரும் தரப்பு தங்களின் தொடக்க அறிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்து, முகைதின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆதாரங்களையும் விளக்கவுள்ளது.

மேலும், இந்த வழக்கின் போது வழக்குத் தொடரும் தரப்பு 30-க்கும் மேற்பட்ட சாட்சிகளை அழைத்து சாட்சியம் வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *