இறந்தபின் நீதி, தொடரும் சட்டப் பயணம்
- Tamil Malar (Reporter)
- 16 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 16-
செஷன்ஸ் நீதிமன்றம் இன்று, 2.8 மில்லியன் லஞ்சம் தொடர்பான வழக்கில் மறைந்த டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடினை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது. முன்னாள் கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான அவருக்கு எதிரான வழக்கை தொடர அரசுத் தரப்பு விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
மறைந்த புங் மொக்தார், FELCRA நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகமற்ற தலைவர் ஆகவும் பணியாற்றியவர். அவர், அந்த நிறுவனம் 150 மில்லியன் மதிப்பிலான Public Mutual யூனிட் டிரஸ்ட் முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் லஞ்சம் பெற்றதாகக் கூறி, மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார். எனினும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் வழக்கு நிறுத்தப்பட்டதால், நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதனிடையே, அவரது மனைவியான டத்தின் ஸ்ரீ ஸிசி இசெட் அப்துல் சமாட், இதே வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூறி எதிர்கொள்ளும் மூன்று லஞ்ச குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் என தாக்கல் செய்த மனுவை அரசுத் தரப்பு நிராகரித்தது. இதனால், ஸிசி இசெட் தொடர்பான வழக்கு தொடரும் என நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி, டத்தின் ஸ்ரீ ஸிசி இசெட்டின் வழக்கு விசாரணை வரும் மார்ச் 5, 6 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



