14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 13,

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்ட வழக்கில் 23 வயதான சமூகவலைத்தல பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 17 கங்காரில் உள்ள ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கங்கார் Tuanku Fauziah அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கங்கார் மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.

சம்பவ நாளில் அதிகாலை 12 மணிக்குப் பாதிக்கப்பட்ட சிறுமியை 23 வயதான இளைஞர் வாகனத்தில் அழைத்து சென்றதாகவும் அதிகாலை 3.10 மணிக்குச் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கங்கார் மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் வேலை செய்து வரும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் விசாரணைக்காக நீதிமன்றம் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கங்கார் மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *