மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த 4 மாணவர்களும் SPM தேர்வு எழுத அனுமதி! – FADHLINA SIDEK
- Thinagaren Sanggaren
- 12 Oct, 2025
அக்தோபேர் 12,
மலாக்காவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் படிவம் 3 மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய 5 மாணவர்களும் SPM தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK இன்று தெரிவித்தார். 15 வயது மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே வேளையில் நவம்பர் 3 தொடங்கும் SPM தேர்வை அந்த 4 மாணவர்களும் எழுத கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாகவும் FADHLINA SIDEK தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்குக் கூட கல்வி உரிமையை அரசாங்கம் பறிப்பதில்லை, அதே வேளையில் குற்றவாளிகள் என இன்னும் நிரூபிக்கப்படாதவர்களின் கல்வியும் தடைப்பட கூடாது என்பதில் கல்வி அமைச்சு உறுதியாக இருப்பதாக FADHLINA SIDEK தெரிவித்தார். இது குறித்து மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவுடனும் மாநிலக் காவல்துறையுடனும் தேர்வு ஆணையத்துடனும் இன்று காலை சிறப்புச் சந்திப்பை மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் FADHLINA SIDEK தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



